--- --:--:-- --

ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை..!

12

திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காக்களூர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார் அரவிந்த்.

 

அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை தனது செல்போனில் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை காட்டி பள்ளி மாணவியை மிரட்டியதால் மனவேதனை அடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

 

இதனை அறிந்த பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon