ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு… அர்ச்சிப்பு நடைபெற்றது
ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு விழா இன்று பங்குதந்தைகளால் அர்ச்சிப்பு நடைபெற்றது.
திருவாடானை வட்டம், ஓரியூரில் புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 42 அடி உயர அருளானந்தரின் பிரமாண்ட சிலையை மதுரை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.

போர்த்துகீசியரான அருளானந்தர் என்ற ஜான் டி பிரிட்டோ 11 பெப்ரவரி 1693-ல் உயிர்த்தியாகம் செய்த இடம் ஒரியூர். தண்டனையை நிறைவேற்றுபவர்களை நோக்கி அருள் அருளானந்தர் தன் தலையை மனமுவந்து தந்த வண்ணம் நிற்கும் சிலை, கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலய கட்டிடத்தின் முகப்பில் உள்ளது.
இந்தத் துறவியின் தலையை வெட்டும்போது தெறித்த ரத்தத்தால், இந்தப் பகுதியில் உள்ள மணற்குன்றுகள் அனைத்தும் சிவப்பாக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக இது திகழ்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.






