தங்கையின் கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன்..!
நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் தங்கை கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் காயத்ரி உடல்நலக்குறைவு எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் காயத்ரி வேறு ஒருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவரின் அண்ணன் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.
காயத்ரியின் கொலைக்கு உறவினர்களும் உடந்தையா என்கிற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






