--- --:--:-- --

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

8

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் சில மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon