--- --:--:-- --

மெரினா கடலில் மூழ்கி மாயமான இளைஞர்.!

1

சென்னை மெரினாவில் கடலில் குளித்த பொழுது மாயமான கல்லூரி மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல்குமார் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது வந்த ராட்சச அலை நிர்மல்குமாரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கடலூர் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சென்று தேடினர்.

 

இது தவிர நீச்சல் வீரர்கள் நிர்மல்குமாரை மாலை வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர். இதேபோல் வெள்ளிக்கிழமை மெரினா கடற்கரையில் சிக்கி மாயமான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon