--- --:--:-- --

தோழியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு கணவன் மற்றும் குழந்தையை விட்டுச் சென்ற பெண்..!

9

தோழியுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையையும் கணவனையும் பெண் கைவிட்ட சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

 

இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சரவணன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் தேடுதல் முயற்சியில் உடனடியாக பலன் கிடைக்கவில்லை.

 

இதனிடையே தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை ஜெயஸ்ரீயை தீவிரமாக தேடி வந்த பொழுது அவர் சென்னையில் வசிப்பதை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்பொழுதுதான் ஜெயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறிதற்கான காரணம் தெரிய வந்தது. ஜெய்ஸ்ரீ தனது தோழி தேவியுடன் இயல்புக்கு மாறாக நெருங்கி பழகியுள்ளார். காதலர்களை போல இருவரும் பழகிய விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் ஜெயஸ்ரீக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் அவரை பிரிய மறுத்ததால் இவ்வாறு சென்றதாக தெரிய வந்துள்ளது. அவர் இளைஞன் போல் சிகை அலங்காரம் செய்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon