--- --:--:-- --

நடிகர் விஜய் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறாரா..?

8

விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை சில காட்சிகளில் நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக இணையதளங்களில் தகவல்கள் பரவியதால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

 

அடுத்த வருடம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த படத்தில்தான் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். விஜய்யும், மகேஷ்பாபுவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களை தான் தமிழில் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் ரீமேக் செய்து விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon