--- --:--:-- --

ஆடைகள் இல்லாமல் திருட வந்த நபர்..!

7

கோவையில் ஆடைகள் இல்லாமல் சோ ரூமுக்குள் புகுந்து 12 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த விசித்திர ஆசாமியை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராமநாதபுரம் பகுதியில் இயங்கிவரும் சோரும் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த அவர் கல்லாப்பெட்டியை தனியாக உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளார்.

 

கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த ஆசாமியை தேடி வந்த போலீசார் சிங்காநல்லூரில் பதுங்கி இருந்த பொழுது சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

 

விசாரணையில் அவர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்த நிலையில் ஆடையை வைத்து போலீசார் அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் என நினைத்து ஆடையில்லாமல் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon