--- --:--:-- --

பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை தடுக்க வேண்டும்..!

3

மதுரையில் விதியை மீறி பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீ பற்ற வைத்து வீடுகளில் தூக்கி வீசுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

 

அந்தவகையில் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அது குறித்து காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி எழுந்துள்ளது.

 

மேலும் மாவட்டம் முழுவதும் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon