--- --:--:-- --

சைக்கிள் ஓட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா..!

2

இருபத்தி ஒரு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா தனது மன வலிமையை யாராலும் உடைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 

நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காதது சமந்தா தொடர்ந்து மவுனம் காத்து வந்தார்.

 

இந்த நிலையில் தன் நண்பர்களுடன் மழையில் நனைந்தபடி மாற்றுத்திறனாளிகள் உடன் சைக்கிள் ஓட்டும் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 21 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதாக தெரிவித்த சமந்தா அடுத்த முறை 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon