--- --:--:-- --

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர்..!

2

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

தாம்பரம் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரியை முடித்து விட்டு அருகிலுள்ள குடியிருப்புக்கு சென்றுள்ளார் . அப்பொழுது ராமச்சந்திரன் தனியாக பேச வேண்டும் என ஸ்வேதாவை அழைத்துள்ளார்.

 

அப்பொழுது தனியே பேசிக் கொண்டிருந்த பொழுது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை தாக்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞரும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon