--- --:--:-- --

குளிர்பானம் அருந்திய சிறுமி வாந்தி எடுத்ததால் பெற்றோர் அச்சம்..!

1

கரூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது குளிர்பானம் அருந்திய சிறுமி வாந்தி எடுத்ததால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். ஆண்டாள் கோவில் பகுதியை சேர்ந்த இளங்கோவனின் 9 வயது மகள் தாரணி.

 

தனது சகோதரருடன் நேற்று இரவு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர்கள் பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை அருந்தியுள்ளார். இந்நிலையில் இன்று காலை தாரணிக்கு வாந்தி ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அங்கு தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். கெட்டுப்போன குளிர்பானத்தை அருந்தியதால் சிறுமி வாந்தி எடுத்து இருக்கலாம் என்ற அச்சத்தில் பெற்றோர் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து சிறுமி அருந்திய குளிர்பானத்தை விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்த நிலையில் குளிர்பானம் காலாவதி ஆகவில்லை என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon