--- --:--:-- --

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி..!

3

காராஷ்டிராவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

 

இந்த பயிற்சி மையம் நீட் தேர்வில் மோசடி செய்திருப்பதாக அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நீட் தேர்வு எழுத வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படங்களை மாற்றி ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது . நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் தலா 5 லட்சம் பணம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பயிற்சி மையம் மற்றும் அந்த பயிற்சி மையத்தில் பயின்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் 5 மாணவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon