--- --:--:-- --

நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனையுடன் பிணை.!

2

ன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கும் நிபந்தனையுடன் பிணை வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் புழல் சிறையில் ஓய்வெடுத்து வந்தார்.

 

மீரா மற்றும் அவரது நண்பர் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒன்றாக முறையீடு செய்தனர். நீதியரசர் செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மொத்தம் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

இதனை ஏற்று நீதியரசர் மீரா மற்றும் அவரது ஆண் நண்பருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon