விந்தணுவை ஆர்டர் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட பெண்..!
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் வழியாக விந்தணுக்களை ஆர்டர் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள வடக்கு பகுதியை சேர்ந்தவர் டைலர்.
33 வயதான இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் வாழ்க்கை துணைவராக வாழ்ந்து வந்த நண்பருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவில் விரிசல் ஏற்பட்டது. தனியாக வாழ்ந்து வரும் சூழலில் இரண்டாவதாக ஒரு குழந்தை பெற்று கொள்ள விரும்பினார்.
ஆனால் அவர் இன்னொரு நபரின் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. எனவே செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.






