சமத்துவம் சமூக நீதிக்கு எதிரான உயிர்க்கொல்லி நீட் தேர்வு – கமல்ஹாசன்
சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்கொல்லி நீட் தேர்வு என தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 விழுக்காடு மாபெரும் 1.7 விழுக்காடாக சரிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஒரு உயிர்கொல்லி தேர்வு என்பதை நீதிபதி ஏ கே ராஜன் குழு உறுதிபடுத்தி இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன் கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று மருத்துவராகும் கனவை இந்த தேர்வு பாழ் ஆகிறது எனவும் இது சமத்துவத்துக்கு சமூகநீதிக்கும் எதிரானது என்பதற்கு இந்த ஒரு புள்ளி விவரமே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.






