--- --:--:-- --

பாட்டி கதாபாத்திரம் தேவைப்பட்டதால் மீரா மீதுனை தேர்வு செய்தேன்..!

1

டிகை மீரா மீதுனை தமிழக மக்கள் பாட்டியாக பார்க்கும் நிலையில் தம் படத்திற்கு பாட்டி கதாபாத்திரம் தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்ததாக படத்தின் இயக்குனர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

 

குளோபல் என்டர்டைன்மென்ட் வழங்கும் பேயை காணோம் படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை சின்மயா நகரில் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களை படக்குழுவினர் கூட்டாக சந்தித்தனர். அப்பொழுது பேசிய படத்தின் தயாரிப்பாளர் நடிகை மீரா மிதுன் வெளியில் எப்படியோ தெரியாது ஆனால் படத்தில் நன்றாக நடித்துள்ளார். ஒரே டேக்கில் நடித்து முடித்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.

 

மீராவை தமிழக மக்கள் பாட்டியாக பார்ப்பதால் பாட்டி கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon