கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..!
கோவை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக் கிழமை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் காய்கறி, பால், மருந்தகம், மளிகை கடைகள் தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்மார்க்கெட், மால்கள், திரையரங்குகள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.உணவகங்கள் பேக்கரிகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் மாவட்ட முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.






