கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை..!
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கே சி வீரமணி வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி வீரமணி மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.






