தமிழக வீரர் மாரியப்பனுக்கு மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு..!
பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் இன்று அவர் தமிழகம் திரும்பும் போது அவருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
இம்முறை தங்கப்பதக்கத்தை தவறவிட்டு விட்டதாகவும், அடுத்த முறை தங்கப்பதக்கத்தை கண்டிப்பாக வெல்வேன் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






