முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது குறித்து மேல் விசாரணை நடைபெற இருக்கிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி அளவுக்கு சொத்து சேர்ப்பதற்காக கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
மூன்றாவது நீதிபதியாக நிர்மல் குமார் முன்பு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக 73 சதவிகிதம் சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.






