--- --:--:-- --

10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரொனா தொற்று..!

3

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

நேற்று முன்தினம் 557 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன.

 

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon