குழந்தையை கடத்தி விட்டதாக போலீசாருக்கு வந்த புகார்..! ஆனால் நடந்ததோ வேறு..!
திருப்பத்தூரில் குழந்தையை கடத்தி விட்டதாக போலீசாருக்கு அங்கு வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூரை அடுத்த சீரகபட்டி பகுதியை சேர்ந்த சுந்தர் அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவரது மூன்றாவது மகன் பிரதீஷ் அருகில் உள்ள அவர்களது நிலத்தில் தூங்கிக்கொண்டு இருந்தான். ஆனால் இது குறித்து அறியாத அவரது மனைவி தெய்வானை குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்தி சென்றதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன குழந்தையை தேடினர். அப்பொழுது நிலத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தை பிரதீக்ஷ தூக்கிக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.






