ஓடும் பேருந்தில் நகைகளை திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்தில் ஆசிரியர் ஒருவர் நகைகளை திருடியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுதா.
இவர் கடந்த 23 ஆம் நாள் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளார். அப்பொழுது கயத்தாறு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பொழுது தனது கைப்பையில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது.
பின்னர் இது தொடர்பாக கயத்தாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனிடையே நேற்று அதே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்களை போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்பிலான 35 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






