--- --:--:-- --

மின்சாரம் தாக்கிய முதியவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் உயிரிழப்பு..!

5

சீர்காழி அருகே லாரி உரசியதால் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கிய முதியவரும் அவரை காப்பாற்ற முயன்ற இளைஞர் உயிரிழந்தனர். அதி வேகமாக சென்ற லாரி உரசியதால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது.

 

அந்த வழியே சென்ற சிங்காரவேலு 65 வயது முதியவர் மீது அந்த மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கியது பிடித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே அசைவற்று இருந்தார்.

 

அக்கம்பக்கத்தினர் வந்து மின் இணைப்பை துண்டித்து இருவரையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

விபத்தை ஏற்படுத்திய லாரி யாருமில்லாத இடத்தில் நிறுத்திவிட்டு அந்த ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon