ரயில் தண்டவாளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்டிருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள்..!
தர்மபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்டிருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலிசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் செல்லும் ரயில் பாதையில் சிதறிக்கிடந்த 2000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கண்டறிய ராம்குமார் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் அந்த நோட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா என எழுதப்பட்டிருந்தது அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடும் நோட்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்த எடுத்து சென்றபோது தவறி விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






