--- --:--:-- --

பொறியியல் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு – ரேண்டம் எண் இன்று வெளியீடு

7

பொறியியல் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பபடிவம் முடிவடைந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. படிப்புகளில் சேருவதற்காக ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 876 மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

 

இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 714 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும் அவர்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 532 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பித்துள்ளனர்.

 

விண்ணப்பம் செய்தவர்கள் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும் பொதுப் பிரிவுக்கு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon