--- --:--:-- --

சென்னையில் இரவில் பெய்யும் மழை..!

7

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பலத்த மழை பொழிந்தது. பகலில் குறைவாக இருந்த போதிலும் இரவில் அவ்வப்போது லேசான மழை பொழிந்து வருகிறது.

 

இந்த நிலையில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் கனமழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

 

அதைப்போல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

 

இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் நீலகிரி, கோவையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon