--- --:--:-- --

பெண் பயணியை ஆபாசமாக பேசி தாக்கிய ஓட்டுனர்..!

6

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பெண் பயணி ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடையம் ஆலங்குளம் இடையே செல்லும் அரசு பேருந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநர் இயக்கி சென்றுள்ளார்.

 

பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் தனது மகள் வந்து கொண்டிருக்கிறார் எனவும் சில வினாடிகள் பேருந்து நிறுத்துமாறும் ஓட்டுனரிடம் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுநர் அவரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

 

பதிலுக்கு அந்த பெண்ணும் ஒருமையில் பேசவே வாக்குவாதம் முற்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த ஓட்டுனர் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி அவரை தாக்கியுள்ளார்.

 

விவகாரம் காவல் நிலையம் சென்ற நிலையில் இருவரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரை பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon