செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு..! அதிகாரிகளுடன் ஆலோசனை..!
பள்ளிகள் திறந்ததும் அமல்படுத்தப்பட வேண்டிய கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வகுப்பறைகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள் குறித்து விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதனை இறுதி செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயரதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஒரு சில தினங்களில் விதிமுறைகள் விரிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






