பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பெயிண்ட் டப்பா பார்சல்..!
சென்னை திருவொற்றியூரில் பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பெயிண்ட் டப்பா பார்சல் வந்துள்ளது சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வினோத் என்பவர் 28500 ரூபாய் மதிப்புடைய கேமராவை ஆஃபர் மூலம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கு 12 மாத தவணையில் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பார்சல் வினோத்தின் கை களைத் தேடி வந்த நிலையில் அதை வாங்கிப் பிரித்த அவருக்கு அதிர்ச்சியாக போலி கேமராவும் , பெயிண்ட் டப்பாவும் இருந்துள்ளது. இதுகுறித்துஅவர் அளித்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.







