திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்த 5 பயணிகளுக்கு கொரொனா..!
திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்த 5 பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் தொற்று இல்லை அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
சான்றிதழ் இல்லாதவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் .இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து விமான நிலையத்திற்கு வந்த 91 பேரில் 86 பேர் சான்று வைத்திருந்த நிலையில் ஐந்து பேரிடம் சான்று இல்லாமல் இருந்தது.
இதனால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் முடிவுகள் வரும் வரை வெளியே சுற்றக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






