--- --:--:-- --

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு.!

6

த்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்கும் உதவுவதற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

கொரொனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்ட மதிய உணவை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவு எடுத்துள்ளதாகவும் இதை 15 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon