பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பொய்க்கால் குதிரை என தலைப்பு..!
பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பொய்க்கால் குதிரை என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் இந்த படத்தை இயக்கும் நிலையில் தனுஷுடன் மேலாளராக பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த ஒரு மாதமாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்திற்கு தலைப்பை அறிவித்துள்ளனர்.






