வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சேலம் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை பகுதிகளில் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகம் காற்று வீசவாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது





