--- --:--:-- --

அலகு குத்திய இளைஞர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியான காட்சி..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் குருகுலம் பள்ளி அருகே நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அலகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்ததில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

அணைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக சின்னகடல் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உட்பட மேலும் அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிரைன் வாகனத்தில் தங்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோயிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.

 

அப்போது திடீரென 6 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கி சென்று ஆகாஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் அங்கிருந்தவர்கள் கீழே இறங்கி நடந்து சென்று கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon