--- --:--:-- --

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.!

6

மிழக அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. 2021- 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 11-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை வரும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

 

இதனையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

எனவே நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒப்புதல், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி, வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon