பகத்சிங் போல் நடித்த சிறுவன் பரிதாபமாக பலி..!
உத்திரப்பிரதேசத்தில் சுதந்திர தின நாடகத்திற்கான ஒத்திகையின் போது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை தூக்கிலிடுவது போன்ற காட்சி உள்ளது. அதில் 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி உயிரை இழந்தான்.
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த பாப்பன் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் சிங்கின் மகன் சிவன் மற்றும் சிறுவர்களுடன் சேர்ந்து நாடகத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காட்சிகளின் ஒத்திகை நடக்கும் போது சிவன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டியுள்ளார்.
சிறுவன் நின்ற நாற்காலி நழுவியதால் தூக்கில் தொங்கியதில் சிவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அலறினர். சிறுவனை உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






