இரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..!
இரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு எடுத்து சென்றனர்.
கரூர் – திருச்சி சாலையில் காந்தி கிராமத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அந்த பாம்பு இரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை ஒட்டிய பகுதியில் நீண்ட நேரமாக படுத்திருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த பாம்பை பத்திரமாக மீட்டு சென்றனர். அதுபோல் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தார் ஒன்றில் சிக்கி தவித்த மற்றொரு கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.






