சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை.!
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. திடீர் மழையால் ஒரு சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.






