வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




