ஒலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் கொரொனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூன்று வீரர்கள் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவில் பங்கேற்க வந்த தொற்று ஏற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் 148 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் வீரர் வீராங்கனைகளின் எண்ணிக்கைகள் மட்டும் 16 ஆக அதிகரித்து வருவதை தொடர்ந்து முககவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.






