தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை ஹோசிகோ தங்கப்பதக்கம் வென்றார்.
இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டுள்ளது.
பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் வாங்கிய தங்கப்பதக்கம் சானுவுக்கு வழங்கப்படும். இதன் பின் சில இடங்களில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனை வழக்கமான ஒன்றுதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.






