கார் வீராங்கனையாக மாறும் முயற்சியில் நடிகை நிவேதா பெத்துராஜ்..!
நடிகர் அஜித்தை போலவே நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் வீராங்கனையாக முயற்சியில் இறங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வந்தவர்.
அவரைப்போலவே நடிகை நிவேதா கார் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அடியே அழகே அழகே பாடல் மூலம் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ் மைதானத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கோவையில் பயிற்சி முதல்நிலை எடுத்திருப்பதாகவும் சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார் என்றால் மிகவும் விருப்பம் என நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என்று பெருமையாக கூறியுள்ளார்.






