--- --:--:-- --

வரும் 18ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு..!

11

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து வரும் 18ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

இத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கொரொனா பரவல், தடுப்பு ஊசி, விவசாயிகளின் போராட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் வரும் 18ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

 

மக்களவை சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சியின் மக்களவை குழு தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon