--- --:--:-- --

போதை ஊசி போட்டு நோயாளி உயிரிழப்பு.! ஓரினச் சேர்க்கை போலி டாக்டர்..!

12

போதை ஊசி போட்டு இளைஞர் பலியான சம்பவத்தில் போலி மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரின் பின்னணியில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.

 

விசைத்தறி கூலி தொழிலாளியான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட அவர் அங்குள்ள அலோபதி மருத்துவர் என கூறப்பட்ட சிவகுமார் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டனுக்கு டாக்டர் சிவகுமார் ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் மணிகண்டன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இடுப்புக்கு கீழ் செயல் இழந்து விட்டதாகவும் போதை ஊசி போடப்பட்டு இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

அதே நேரம் மணிகண்டனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விவரம் குறித்து விசாரித்தபோது டாக்டர் சிவகுமார் தலைமறைவானது தெரிய வந்தது. இதனிடையே மணிகண்டன் கடந்த 10ஆம் தேதி உயிர் இழந்து விடவே பிரச்சனை பூதாகரமாக மாறியது.

 

உரிய நடவடிக்கை எடுக்க கோரி மணிகண்டனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் மருத்துவர் சிவக்குமார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். களத்தில் இறங்கிய போலீசாருக்கு சிவகுமார் பற்றிய தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சியை தந்தது.

 

உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் 1997இல் டிப்ளமோ அலோபதி மருத்துவம் படித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் என கூறி போலியாக மருத்துவம் பார்க்க வந்தது விசாரணையில் தெரியவந்தது.

 

இவரின் முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது ஒரு பெண்னை திருமணம் செய்து அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவகுமார் ஓரின சேர்க்கையாளர் என்றும் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மருந்து செலுத்தி பின்னர் அவர்களைத் தன் தேவைக்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

சிகிச்சைக்கு வருவோரின் செல்போன் நம்பர்களை வாங்கிக்கொண்டு அவர்களிடம் சகஜமாக பேசி பழகி அவர்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார் சிவக்குமார். 51 வயதான சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தங்கள் மகனின் மரணத்துக்கு உரிய நியாயம் வேண்டும் என நிற்கிறது சிவகுமாரால் உயிரைவிட்ட மணிகண்டனின் குடும்பம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon