தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவை..!
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவைப்படுகிறது என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன தடுப்பூசி பற்றாக்குறை குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் மகாராஷ்டிராவில் தினமும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக திறன் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப் போவதாக அவர் கூறியுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மூன்று கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





