இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப்போற்று திரைப்படம்..!
படத்தை ஹிந்தியில் தயாரிக்க இருப்பதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்தில் மோகன் பாபு, அபர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க இருப்பதாக நடிகர் சூர்யா தனதுட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் இந்தியில் உருவாகும் சூரரைப்போற்று படத்தை சுதா இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






