--- --:--:-- --

மேகதாது அணை  பிரச்னை – மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

5

மேகதாது அணை  தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக சட்டபூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

 

இது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க முடிவு  செய்த முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது .

 

அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon