பட்டாக் கத்தியை சுற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது..!
கேஜிஎப் திரைப்படம் வசனத்திற்கு ஏற்ப நடித்து பட்டாக் கத்தியை சுற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரஞ்சித் சில மாதங்களுக்கு முன் கத்தியை சுழற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவை ரஞ்சித் நண்பரான 17 வயதான சிறுவன் ஒருவன் கேஜிஎப் திரைப்பட மியூசிக் பின்னணியில் உருவாக்கி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளான்.
அத்துடன் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பியதால் அவர்கள் இருவரையும் அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.





